Monday, February 13, 2017
ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து, இருவர் உயிரிழப்பு!!
ராமநாதபுரம் அருகே அரசு நகர்ப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை
கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் காயமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் பகுதியிலிருந்து
பரமக்குடிக்கு சென்ற அரசு நகர்ப் பேருந்து நயினார்கோயில் அருகே பாப்பார் கூட்டம்
கிராமப் பகுதியில் திடீரென ஸ்டேரிங் பழுதாகி சாலையின் இடது புறத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஆறுமுகம்(55), பி.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சன் மனைவி பர்வதம்(60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காடர்ந்தகுடி கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் ஆறுமுகம்(55), பி.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சன் மனைவி பர்வதம்(60) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயமடைந்த பொட்டக வயலைச் சேர்ந்த
தங்கம்(32)வாசுகி(44)
ஆகிய இருவரும் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டனர்.
லேசான காயமடைந்த கொட்டகுடி பத்மினி(51), காச்சானி கிராமத்தைச் சேர்ந்த இந்திரா(50), பி.கொடிக்குளம்
பஞ்சவர்ணம்(60),
லெட்சுமி(35), வெள்ளையம்மாள் (46)ஆகிய 5
பேரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக நயினார்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து
பேருந்து ஓட்டுநர் கிருபாகரன், நடத்துநர் அர்ச்சுணன் ஆகிய இருவரிடம்
விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment