Sunday, February 19, 2017
ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக தர்னா போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது!!
ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பாக
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை திடீர் தர்னா போராட்டத்தில்
ஈடுபட்டார்.
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்தவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த டி.ராமசாமி. இவரது மகன் டி.ஆர்.சீனிவாசன் . ராமநாதபுரம் நகர் ஜெயலலிதா பேரவையின் செயலாளரான இவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆவார்.
இவர் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் டி.பிளாக் பேருந்து நிறுத்ததில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தார். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினரான அமைச்சர் மணிகண்டன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக்கூறி திடீரென தர்னாவில் ஈடுபட்டார்.
தகவலறிந்து வந்த கேணிக்கரை காவல்துறையினர் டி.ஆர்.சீனிவாசனையும் கட்சித் தொண்டர்கள் இருவரையும் கைது செய்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment