(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 9, 2017

தபால் நிலையங்களில் போலீஸ் தேர்வுக்கான விண்ணப்பங்கள், பிப் 22க்குள் விண்ணப்பிக்க வேண்டும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தபால் நிலையங்களில் போலீஸ் தேர்வுக்கான 17 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமத்தால் போலீஸ், சிறை, தீயணைப்பு துறைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் தபால் அலுவலகங்களில் ஜன.,23 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், திருவாடானை, கமுதி, கடலாடி, முதுகுளத்துõர், பேரையூர் தபால் அலுவலகங்களில் ரூ.30 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். 

விற்பனை துவங்கிய நாளில் இருந்து இது வரை 17,000 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணம், விண்ணப்பங்களை விரைவு தபால் மூலம் அனுப்ப அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

விரைவு தபாலில் முகவரியுடன் அலைபேசி எண்ணை எழுதி, விண்ணப்பம் வினியோகித்த தகவலை எஸ்.எம்.எஸ்., மூலம் பெறலாம். 

விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்.,22 என்பதால் அதற்கு முன்பாக விண்ணப்பங்கள் பெற வேண்டும், என தபால் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment