Saturday, February 25, 2017
மாதம் 2–ந்தேதி பிளஸ்2 தேர்வுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,471 பேர் தேர்வு எழுதுகின்றனர்!!
தமிழகத்தில்
இந்த கல்வி ஆண்டிற்கான பிளஸ்2 தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் 2–ந்தேதி தொடங்கி 31–ந்தேதி வரை நடைபெறுகின்றன.
இந்த
தேர்வை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 4,236 மாணவர்களும், 5,235 மாணவிகளுமாக 9,471 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல, பரமக்குடி
கல்வி மாவட்டத்தில் 3,122 மாணவர்களும், 3,341 மாணவிகளுமாக மொத்தம் 6,463 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதன்படி
ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 7,358 மாணவர்களும், 8,576 மாணவிகளுமாக மொத்தம் 15,934 பேர் பிளஸ்2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 25 தேர்வு மையங்களும், பரமக்குடி
கல்வி மாவட்டத்தில் 20 கல்வி
மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment