Sunday, February 12, 2017
முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி!!
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர்
வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70
லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை
வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார். இவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் இருவர், தங்களை வங்கி ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள், அவரது ஏ.டி.எம். கார்டுக்குரிய நாள்கள் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதை புதுப்பிக்க அதன் எண்ணைத் தெரிவிக்குமாறும் கூறினர்.
.
இதை நம்பிய அவர் அந்த எண்ணைத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது கணக்கில் இருந்த ரூ.1,70,285 இணையம் மூலமாக திருடப்பட்டது
இதுகுறித்து தெரியவந்ததும் கடலாடி காவல் நிலையத்தில்
சத்தியமூர்த்தி புகார் அளித்தார். அப்புகாரில் 7255807163 என்ற
செல்லிடப்பேசி எண்ணிலிருந்து தான் வங்கி ஊழியர்கள் பேசியது போல அந்த மர்ம நபர்கள்
ஏ.டி.எம். எண்ணைக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் கடலாடி காவல் ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment