(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 11, 2017

ராமநாதபுர மாவட்ட பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க பிப்ரவரி 15க்குள் பதிவு செய்யவும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற உள்ள பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் இ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழா, தெருமுனைப் பிரசார இயக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.

எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும்
கல்வியும் சமூக நீதியும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் ராமநாதபுரம் சர்ச் ஸ்டாப் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.  

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வரும் 15 ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி மூலம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் இ.பாலகிருஷ்ணன், வ.உ.சி.நகர்
ராமநாதபுரம்- 623503 

என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்போருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும். ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரிக்கு ஒருவர் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். ஒரு மணி நேரம் மட்டுமே கட்டுரைப் போட்டி நடத்தப்படும். போட்டியில் பங்கேற்போருக்குரிய தாள்களை அறிவியல் இயக்கமே வழங்கும்.

போட்டியில் பங்கேற்போருக்கு பயணப்படி, மதியஉணவு ஆகியன வழங்கப்பட மாட்டாது. 

இப்போட்டியில் பொறியியல், மருத்துவம், கல்வியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். 

மேலும் விவரங்களுக்கு 9486573129 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment