Saturday, February 11, 2017
ராமநாதபுரம் கிரிக்கெட் அணிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!
மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்டோருக்கான
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ராமநாதபுரம் அணிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கே.டி.பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குள்பட்டோருக்கான
கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள்
தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி
12) காலை 10
மணிக்கு நடைபெறுகிறது.
இதில் 1.9.2003 ஆம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள
முடியும். தேர்வின் போது சிறப்பாக செயல்படுவோர் ராமநாதபுரம் மாவட்ட அணிக்குத்
தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்
என்றார்.
பேட்டியின்
போது கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்றுநர் கபிலன் உள்ளிட்ட மாவட்ட கிரிக்கெட் சங்க
நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment