(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 26, 2017

ராமநாதபுரத்தில் நகை அடகு நிறுவனத்தில் ரூ.11லட்சம் மோசடி!!

No comments :
ராமநாதபுரத்தில் நகை அடகு நிறுவனத்தில் ரூ.11லட்சம் மோசடி செய்தது தொடர்பாக அந்நிறுவனத்தின் மேலாளரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள நகை அடகு நிறுவனத்தின் மேலாளர் காசி(38), நகை மதிப்பீட்டாளர் சரவணக்குமார் மற்றும் ஊழியர் குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து நிறுவனத்திலிருந்த 148 கிராம் தங்கம் மற்றும் ரொக்கம் ரூ.7.37 லட்சம் உள்பட மொத்தம் ரூ.11,17,943 மோசடி செய்தனராம்.



இந்த விபரம் தணிக்கையில் தெரிய வந்ததையடுத்து அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நிறுவனத்தின் மேலாளரான காசியை கைது செய்துள்ளனர்.

வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரையும் தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment