Wednesday, January 4, 2017
மதுரை–ராமேசுவரம் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க ஆய்வு!!
மதுரை–ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும்
ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
மேற்கொண்டார்.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக வாரணாசி, ஓகா, கோவை, திருப்பதி, கன்னியாகுமரி
போன்ற பகுதிகளுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களும், மதுரையில் இருந்து பயணிகள்
ரெயிலும் இயக்கப்படுகிறது. மதுரை–ராமேசுவரம் இடையே இயக்கப்பட்டு வரும்
ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர்
சுனில்குமார் கர்க் நேற்று மதுரையில் இருந்து ஆய்வு ரெயில் மூலம் ராமேசுவரம்
வந்தார்.
அந்த ரெயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில்
இயக்கப்பட்டது. அப்போது ரெயில் தண்டவாளத்தின் உறுதித்தன்மை, அதிர்வு
ஆகியவற்றை அதற்கான கருவி மூலம் சோதனை கோட்ட மேலாளர் ஆய்வு செய்தார். பின்பு
பாம்பன் ரெயில் பாலத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து ராமேசுவரம் வந்த அவர்
ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிக்கெட் பரிசோதகர்கள் ஓய்வு அறையை
திறந்து வைத்தார்.
இதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மதுரை–ராமேசுவரம் இடையே மின்சார ரெயில்
திட்டம் எதுவும் இல்லை. ராமேசுவரத்துக்கு, சென்னை மற்றும் முக்கிய
நகரங்களில் இருந்து புதிய ரெயில் விடுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.
திருவிழாக்காலங்களில் மட்டும் மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்
இயக்கப்படும்.
பாம்பன் பாலத்தில் ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட
உள்ள புதிய தூக்குப்பால பணிகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் துணை கோட்ட மேலாளர் முரளிகிருஷ்ணா
உடனிருந்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment