முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 31, 2017

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!!

No comments :

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக  கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது ஜல்லிக்கட்டு சட்டம் 2 நாட்களில் அரசிதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டம் 2014ம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.



எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள போது அதைப் பற்றி பேசவே கூடாது என்பது தான் சட்டம். ஆனால் அதனை மீறி தமிழகத்தில் எவ்வாறு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதித்தது ஏன். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த சட்ட ரீதியான பதில்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை கல்லூரியில் நடைபெற்ற விலையில்லா மடிக்கணினி வழ்ங்கும் விழா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ரூ.27¾ லட்சம் மதிப்பில் 163 மாணவமாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:



மறைந்த முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவிகளின் நலனை மேம்படுத்தும் விதமாக 14 வகையான மாணவர் நல திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்திலும் முழுமையாக செயல்படுத்த இயலாத திட்டமான இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் 33 லட்சம் மாணவ மாணவிகள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இதுதவிர மாணவமாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 5,00,000 மாணவமாணவிகளுக்கு ரூ.890 கோடி மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தி வரும் பல்வேறு மாணவர் நல திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப், இயக்குனர் ஹாமீது இப்ராகீம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ. அசன்அலி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, முன்னாள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் தர்மர், சுந்தரபாண்டியன், கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், கீழக்கரை நகர் மாணவரணி செயலாளர் சுரேஷ் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, January 28, 2017

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு!!

No comments :
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில்
செயல்பட்டு வந்த இலவச சிறுநீர் கழிப்பிடம் பூட்டப்பட்டதால் அந்தப் பகுதி முழுக்க சிறுநீர் கழித்து சுகாதார் சீர்கேடு செய்யப்பட்டு பேருந்து நிலையம் முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.

மாவட்ட தலைநகர பேருந்து நிலையம் ஊராட்சி பேருந்து நிலையங்களை விட மிக மிக மோசமாக இருக்கின்றது. 

கவனிக்குமா நகராட்சி நிர்வாகம்..?

ஆதங்கத்துடன்

சேக் அப்துல்லாஹ், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை கடலோரங்களில் சுகாதார கழிப்பறைகள் அமைக்கும் பணிகள் ஜரூர்!!

No comments :
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த வெளி கழிப்பிடங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுகாதார கழிப்பறைகள் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் எஸ்.சந்திரசேகரன் கூறியதாவது:

எஸ்.பி.எம்., திட்டத்தின் கீழ் பெத்தரி தெரு, தாலுகா அலுவலக வளாகம், மீனவர் குப்பம், கடற்கரை ஜெட்டி பாலம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார கழிப்பிடங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.




தனிநபர் கழிப்பறைகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை புதிதாக 287 வீடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு மானியமாக 8 ஆயிரம் ரூபாய் வீதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள பயனாளிகள் 50 பேரை தேர்வுசெய்து அவர்களது வீடுகளில் தனியார் பங்களிப்புடன் கழிப்பறைகள் அமைத்து கொடுக்கப்படும்.


துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 21 வார்டுகளிலும் திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாத நிலை உருவாக்கப்படும், என்றார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் அருகே கஞ்சா வியாபாரி கொடூர கொலை!!

No comments :
தலையில் கல்லைப்போட்டு கஞ்சா வியாபாரி கொடூரமாக கொல்லப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60), கஞ்சா வியாபாரியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ராமகிருஷ்ணன் சென்றார். அப்போது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். கீழே தள்ளி, அவரது தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு தப்பினர்.



மண்டபம் போலீசார், ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொழில் போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை!!

No comments :
ராமநாதபுர மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7 மணி வரை இடை விடாமல் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது.

ராமேசுவரம் கோவிலின் தெற்கு ரதவீதி சாலை, நகராட்சி அலுவலகம் அருகில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.

இதனால் அனைத்து வாகனங்களும் மழை நீரில் தத்தளித்தடி படியே சென்றன. ஒரே நாளில் தொடர்ச்சியாக ராமேசுவரம் பகுதியில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் வந்த பக்தர்கள் மழையில் நனைந்தபடியே அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம், கீழக்கரை பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் எழுத்தர் வேலை!!

No comments :

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் எழுத்தர் (Clerk) பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.இ., பி.டெக். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
கலை அறிவியல் பட்டம் என்றால் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் அவசியம்.

இன்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

பட்டப் படிப்புகள் ரெகுலர் முறையில் பெற்றதாக இருக்கவேண்டியது அவசியம். அஞ்சல்வழி கல்வித் திட்டம் மற்றும் திறந்தநிலை கல்வித் திட்டத்தில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்கள் அடிப்படைக் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழில் நன்கு பேச, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 24. முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் 26. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 2 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு ஆன்லைன் வழியில் நடைபெறும். நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள், எழுத்தர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

எழுத்தர்களுக்குச் சம்பளம் ரூ..20,200 என்ற அளவில் கிடைக்கும். உரிய கல்வித்தகுதியும் வயதுத் தகுதியும் உடைய பட்டதாரிகள் ஆன்லைனில் ( www.tmb.in ) விண்ணப்பிக்க வேண்டும். (வங்கியின் இணையதளப் பக்கத்தில் வலதுபுறம் அடியில் ‘Recruitment/Career’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்) ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தைப் பிரிண்ட் அவுட் எடுத்து அத்துடன் தேர்வுக்கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட் மற்றும் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்துத் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு பிப்ரவரி 2-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் தேர்வின் விவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்குத் தபாலிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறிவித்துள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, January 25, 2017

ராமநாதபுரத்தில் ஜன.,31 முதல் பிப்.,3 வரை சிறுதானிய உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!!

No comments :
சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டிய உணவு பொருள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு நான்கு நாட்கள் நடக்கிறது. 

சிறுதானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்கள் தயாரிப்பது குறித்த இலவச பயிற்சி வகுப்பு ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது.

ஜன.,31 முதல் பிப்.,3 வரை நடைபெறும் பயிற்சியில் சிறுதானிய குக்கிஸ், சிறுதானிய புட்டு, சிறுதானிய சத்து மாவு, கொழுக்கட்டை உள்ளிட்ட பல வகை உணவு பொருள் தயாரித்தல் குறித்து செயல்முறை விளக்கத்துடன் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.


மேலும், உணவு பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து உரிமம் பெறுவது குறித்தும், சிறு, குறுந்தொழில் துவங்குவது குறித்தும், வங்கியில் கடன் பெறுவது, சந்தைப்படுத்துவது குறித்தும் நிபுணர்கள் விளக்குகின்றனர்.

முன்பதிவு அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஜன.,27க்குள் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை 94980 21304 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் 100 சதவீதம் விவசாயம் பாதிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியினால் 100 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு உறுப்பினர் ஆர்.அழகேசன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 1 லட்சத்து 22 ஆயிரத்து 32 ஹெக்டேரில் நெல், 15 ஆயிரத்து 22 ஹெக்டேரில் மிளகாய் உள்பட 1 லட்சத்து 53 ஆயிரத்து 397 ஹெக்டேரில் பல வகையான பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது.

இவை அனைத்தும் பருவமழை பொய்த்ததால் காய்ந்து கருகியது. விவசாயம் முழுமையாக முடங்கியது. மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது.



இந்நிலையில் வறட்சி பாதிப்புகளை நேரில் பார்வையிட 10 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இவர்களில், மத்திய நீர்வளத்துறை இயக்குனர் ஆர்.அழகேசன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை துணை செயலர் எஸ்.பி.திவாரி ஆகியோர் அடங்கிய இருவர் குழு நேற்று ராமநாதபுரம் வந்தனர்.

கடலாடி தாலுகாவில், சோளம், கம்பு, சிறுதானிய சாகுபடி பாதிப்புகளையும், கடுகுசந்தை பகுதியில் நிலக்கடலை கருகியதையும், கீழசெல்வனுõர், கீழகிடாரம், திருப்புல்லாணி நல்லாங்குடி பகுதிகளில் நெற்பயிர் பாதிப்பையும், பனையடியேந்தல் பகுதியில் மிளகாய் சாகுபடி பாதிப்பையும் நேரில் பார்வையிட்டனர்.

விவசாய பாதிப்பு குறித்து மத்திய நீர்வளத்துறை இயக்குனர் அழகேசன் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் 100 சதவீதம் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தமிழகத்தில் வறட்சியை பார்வையிட 10 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது. தலா மூன்று பேர் கொண்ட இரண்டு குழுக்கள், 2 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் என, நான்கு குழுக்களாக பார்வையிடுகிறோம்.

நாங்கள் இருவரும், ராமநாதபுரம், சிவகங்கை, துõத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வறட்சி பகுதிகளை பார்வையிடுகிறோம். இதற்கான அறிக்கையை இரண்டு நாட்களில் 10 பேர் கொண்ட எங்கள் குழு தலைவரிடம் ஒப்படைப்போம்.

வறட்சியால் தாங்கள் பாதிக்கப்பட்டதையும், வேறு வாழ்வாதாரம் இல்லாததையும் விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். பிழைப்புக்காக வேறு மாநிலங்களை தேடிச்செல்லும் நிலை உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குழு தலைமைக்கு விரிவாக அறிக்கை தருவோம். விவசாயிகளுக்கு முழு உதவியும் கிடைக்கும், என்றார்.மத்திய குழுவினருடன் விவசாயத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கலெக்டர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

வறட்சி பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவினரை, டி.வி., சேனல் வீடியோகிராபர்கள், பத்திரிகை போட்டோ கிராப்பர்கள் படம் பிடித்தனர். இதை பார்த்த, மத்திய நீர்வளத்துறை இயக்குனர் அழகேசன், எங்களை போட்டோ எடுக்காதீர்கள். பயிர் பாதிப்புகளை எடுத்து, சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் தெரியும் படி செய்தி வெளியிடுங்கள், அப்போதுதான் விவசாயிகளின் நிலை எல்லோருக்கும் தெரியும், என்றார்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, January 24, 2017

ராமநாதபுரத்தில் மாணவர்களின் போராட்டம் வாபஸ்!!

No comments :
ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை  மாணவர்களின் போராட்டம் போலீஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வாபஸ் பெறப்பட்டது.

ராமநாதபுரத்தில் இளைஞர்கள் பாரம்பரிய மீட்புக் குழு என்ற பெயரில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக கடந்த 5 நாள்களாக தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் குடிநீர் வசதி, உணவு வசதி ஆகியனவற்றை செய்து கொடுத்தனர். திங்கள்கிழமை அதிகாலை ராமநாதபுரம் ஏ.எஸ்.பி. சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்டத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றிருப்பதை எடுத்துக்கூறினர்.


இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இளைஞர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருநத பந்தல்களையும் காவல்துறையினர் பிரித்து சுருட்டி வைத்தனர்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரேஷன்கார்டுகளை கலெக்டரிடம் ஒப்படைத்த கிராமத்தினர்!!

No comments :
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரேஷன்பொருட்கள் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து ரேஷன்கார்டுகளை கிராம மக்கள் கலெக்டரிடம் ஒப்படைத்தனர்.


மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

கமுதி அருகே பாப்புரெட்டியாபட்டி ஊராட்சியை சேர்ந்த டி.குமாரபுரம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பாப்புரெட்டியாபட்டியில் உள்ள ரேஷன்கடையில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை.



தாமதமாக செல்லும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. மேலும், இந்த ரேஷன்கடைக்கு உட்பட்ட 4 கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

அதேசமயம், இந்த கடைக்கு வரக்கூடிய ரேஷன் பொருட் களை உள்ளுரில் உள்ள சில கடைக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம் கூடுதல் விலைக்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனுவை அளித்த பொதுமக்கள் இந்த ரேஷன்கடைக்கு உட்பட்ட 120 ரேஷன்கார்டுகளையும் ஒப்படைக்க முயன்றனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்டகை எடுப்பதாக தெரிவித்தார்.

குடிநீர் தட்டுப்பாடு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேலசெங்குடி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் ராஜேசுவரி என்பவரின் தலைமையில் வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மேலசெங்குடி கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


இதனால் பெண்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. எனவே, மேலசெங்குடி கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீர் சப்ளை செய்ய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, January 22, 2017

ராமநாதபுரத்தில் ஜனவரி 24 ஆம் தேதி மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் தலைமை வகிக்கிறார். இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம்.

மின்வாரிய செயற்பொறியாளர் எம்.பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட  செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டத்தில் தொடரும் ஜல்லிக்கட்டு போராட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை 4 ஆவது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஏராளமான மாணவர்கள் இரவு, பகலாகத் தொடர்ந்து 3 நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை 4 ஆவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

சனிக்கிழமை மாலை போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற செய்தி தெரியவந்தது. அப்போது அங்கிருந்த இளைஞர்கள் பலரும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு எழ மாட்டோம் என்று கூறி, நிரந்தரத் தீர்வு தேவை என்று கோஷம் எழுப்பினர்.

ராமநாதபுரம் எஸ்.பி. ந.மணிவண்ணன் நேரடி மேற்பார்வையில் ஏ.எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றி அலுவலகம் முன்பாக பாரம்பரியம் மீட்புக் குழு என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தில் ஆத்ம கார்த்திக், தினேஷ்பாபு, பி.ஆர்.என்.ராஜாராம் பாண்டியன், பிரவீன் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக் குளிர் பானங்களை பாடையில் கட்டி இறுதிச்சடங்கு நடத்தினர். மேலும் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உண்ணாவிரதக் கூட்ட அரங்கத்திற்கு முன்பாக சேவல் சண்டையும் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை இதே இடத்தில் இருநது அறவழி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கொட்டும் மழையில்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி பகுதிகளில் மாணவர்களுடன் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொட்டும் மழையில் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல் தலைமை வகித்தார். வர்த்தக சங்க மாநில துணைத் தலைவர் வி,கருப்பசாமி மற்றும் தமுமுக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவ, மாணவிகள் பேரையூரில் இருந்து முதுகுளத்தூருக்கு பேரணியாக வந்து, காந்தி சிலையின் முன்பு போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்திற்கு கல்லூரியின் நிறுவனர் எம்.ஐ.அகமது யாசின் தலைமை வகித்தார். முதுகுளத்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணபதி, காவல் ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், முத்துராஜ் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கமுதி பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரி மாணவர்களுடன் பல்வேறு அமைப்புகளும், இளைஞர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலாடியில் தேவர் உறவின்முறை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களும்,வியாபாரிகளும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ, மாணவிகள்: திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவ,மாணவிகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, January 18, 2017

ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் போராட்டம்!!

No comments :
  
கடந்த இருவாரங்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு கரகோஷங்களும் அறவழிப்போராட்டங்களும் வலுத்து வருகின்றது.

நேற்று முதல் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை இளைஞர்களின் அறவழிப் போராட்டத்தால் அரசாங்கமும் திகைத்துப் போய் நிற்கின்றனர்.


இன்று காலையில் கீழக்கரையில் உள்ள கல்லூரி மாணவர்களும் காலை முதலே வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராடும் மற்ற கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். 

இதற்கிடையில் அரசு அதிகாரிகளும் காவல் துறையும் மாணவர்களை போராடட்த்தை கைவிட்டு கலைந்து போக வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.



இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களின் களைப்பை போக்கும் வண்ணமும், ஆதரிக்கும் வண்ணமும் கீழக்கரையை சார்ந்த பல சமூக அமைப்புகள் தண்ணீர் மற்றும் குடிநீர் பானங்களை வழங்கி வருகிறார்கள்.


செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக 40 பேர் மீது வழக்கு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக 40 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி சிலை எடுத்த அய்யனார் கோயில் அருகே தடையை மீறி கடந்த 15ஆம் தேதி எருது கட்டு நடத்தியதாக அக்கிராமத்தை சேர்ந்த 15 பேர் மீது கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போல கடந்த 16 ஆம் தேதி காஞ்சிரங்குடியில் கண்ணன் கோயில் அருகில் தடையை மீறி எருதுகட்டு நடத்தியதாக ராமநாதபுரம் மாவட்ட எருதுகட்டு நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஆதித்தன் உள்பட 25 பேர் மீதும் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்டம் முழுதும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்!!

No comments :

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நகர் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


ராமநாதபுரம் நகர் அதிமுக சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகர் செயலாளர் எஸ்.அங்குச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் செ.முருகேசன்,ஜி.முனியசாமி,மாவட்ட மகளிர் அணியின் செயலாளர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் நிர்வாகிகள் பலரும் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர்தூவி, மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல், நகரில் உள்ள 33 வார்டுகளிலும் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞர் பாசறையின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி.வரதன்,நகர் துணை செயலாளர் ஆரிப்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரையில் கட்சியின் நகர் செயலாளர் வீ.ராஜேந்திரன் தலைமையிலும்
,ராமேசுவரத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் அ.அர்ச்சுணன் மற்றும் நகர் செயலாளர் பெருமாள் ஆகியோர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சுல்தான், அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி ஆகியோர் முன்னிலையில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


இதில் முன்னாள் நகர் செயலாளர் இம்பாலா உசேன்,நகர் துணைச்செயலாளர் குமரன்,மாணவரணி செயலாளர் சுரேஷ்,மாணவரணி தலைவர்ஆதித்தன்,இளைஞர் பாசறை நிர்வாகி சிவா உட்பட ஏராளமான அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர்:  முதுகுளத்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர் மற்றும் ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமையிலான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன்,மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் மலைக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாயல்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  ஒன்றியச் செயலாளர் அந்தோனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.செய்யது காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடலாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஒன்றியச் செயலாளர் என்.கே.முனியசாமிபாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கமுதி பேருந்துநிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. காளிமுத்து தலைமை வகித்தார். நகர் செயலாளர் வி.கே.சி.முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்

படங்கள்: கீழக்கரை அதிமுக

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, January 16, 2017

ராமநாதபுரம் அருகே தடையை மீறி எருதுகட்டு!!

No comments :
ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை நடந்த எருதுகட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

ராமநாதபுரம் அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் சிலை எடுத்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் எருதுகட்டு விழா மாட்டுப்பொங்கலன்று நடைபெறுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடை காரணமாக எருதுகட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் காஞ்சிரங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை  தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் திருமுருகன் தலைமையில் எருதுகட்டு நடைபெற்றது. வழக்குரைஞர் டேவிட், பத்மனாபன், ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கயிற்றின் ஒரு முனையை மாட்டின் கழுத்தில் கட்டி மற்றொரு முனையை மாட்டின் உரிமையாளர் பிடித்துக் கொள்ளும் வகையிலான எருதுகட்டு நிகழ்ச்சி நடந்தது.

இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். நிகழ்ச்சி நடைபெற்றது காவல்துறைக்கு தகவல் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)