முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 14, 2016

ஆட்டோ டிரைவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்!!

No comments :
குடிபோதையில் ஆட்டோ டிரைவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் இளங்கோ (35). நேற்று முன்தினம் இரவு இவரது ஆட்டோவில் பசும்பொன் நகரை சேர்ந்த ராஜசேகர் (38), சுரேஷ் (37) இருவரும் ஏறிச்சென்று அவர்களது வீட்டில் இறங்கினர்.



அவர்களிடம் இளங்கோ ஆட்டோவில் வந்ததற்கு வாடகை கேட்டார். குடிபோதையில் இருந்த இருவரும் வாடகை தர மறுத்து இளங்கோவை தாக்கினர்.  காயமடைந்த ஆட்டோ டிரைவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

அவரது புகாரின்பேரில் கேணிக்கரை போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)