முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 5, 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு, தீவிர சிகிச்சை, நலம் பெற அனைவரும் பிராத்தனை!!

No comments :

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

உடனடியாக அவருக்கு ஆஞ்சியோகிராம் எனப்படும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுஅவரது உடல்நிலை சீராக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து தொலைக்காட்சி வாயிலாக அறிந்து கொண்ட பொதுமக்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். இதனால்அப்பகுதியில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10.25: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புரளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




காலை 10.12: எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் அஞ்சன் டிரிகா, தேவ கௌரவ், ஜி.சி. கில்னானி, ராஜீவ் நரங் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையைத் தொடங்கியுள்ளனர்.

காலை 9.50: மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்  ஜே.பி. நட்டா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அப்பல்லோ மருத்துவர்களை தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

காலை 9.47: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தனர். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அப்பல்லோ வந்து சேர்ந்தனர்.

காலை 9.46: தமிழக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 11 மணியளவில் வந்து சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. காலை 9.45: பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எல். கணேசன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

காலை 9.35 : ஞாயிற்றுக்கிழமை இரவைக் காட்டிலும், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த அதிமுக தொண்டர்களிடையே சற்று அமைதி நிலவியது.


காலை 9.32: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)