முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 12, 2016

தேசிய கராத்தே போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்று ராமநாதபுரம் பள்ளி மாணவி சாதனை!!

No comments :
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி அல்நஷீமா தேசிய கராத்தே போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.  

ராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாதெமி பள்ளியின் தாளாளர் டாக்டர் இ.மன்சூர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது:



சென்னை ஆலந்தூரில் இம்மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 15-ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில்
எங்கள் பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவி அல்நஷீமா கட்டா மற்றும் குமித்தே ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் என்றார்.


பள்ளி முதல்வர் முஹம்மது மைதீன் உடன் இருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)