Thursday, June 16, 2016
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி!!
ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற
ஜமாபந்தி நிகழ்ச்சியில், பெருங்குளம்
வட்டாரத்துக்கு உள்பட்ட 8 கிராமங்களின்
கணக்குகளை, மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் உ. மகேஷ்வரன் தணிக்கை செய்தார்.
இந்நிகழ்ச்சியில்,
குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு வட்டாட்சியர் ராமர், சமூகப்
பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் கலைமதி,
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பழனிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் தீர்வாயக் கணக்குகள் ஆய்வின்போது, குயவன்குடி, தேர்போகி, வாலாந்தரவை, கும்பரம், காரான், இரட்டையூரணி, அழகன்குளம்
உள்ளிட்ட பெருங்குளம் உள்வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகள் தணிக்கை
செய்யப்பட்டன.
இதில்,
முதியோர் உதவித்தொகை கோரி இரு மனுக்களும், வீட்டு மனைப்பட்டா மாறுதல் கோரி இரு மனுக்களும் என மொத்தம் 7 மனுக்கள்
பெறப்பட்டன.
இம்மாதம் 16
ஆம் தேதி ராமநாதபுரம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்கள், 17 ஆம் தேதி மண்டபம்
வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின் கணக்குகளும், 21 ஆம் தேதி தேவிபட்டினம் வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களின்
கணக்குகளும் தணிக்கை செய்யப்பட இருப்பதாகவும், அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்து
நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் வட்டாட்சியர் மாரி தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 அரசு மதுபானக் கடைகளை மூட அரசுக்கு பரிந்துரை
செய்திருப்பதாக, மதுவிலக்குப்
பிரிவு ஏ.டி.எஸ்.பி. எஸ். வெள்ளத்துரை புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம்
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள 18 அரசு மதுக்கடைகளை
அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில்,
ராமநாதபுரத்தில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், செய்யது அம்மாள்
மேல்நிலைப் பள்ளி, ஓம்.சக்தி
நகர், கிழக்கு
கடற்கரைச் சாலை ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள அரசு மதுக் கடைகள் மற்றும்
ராமேசுவரத்தில் கோயில்,
பாம்பன் பேருந்து நிலையம்,
முதுகுளத்தூர் முருகன கோயில்,
பாண்டியூர்,
பரமக்குடி அருகே எமனேசுவரம் பிரதான சாலை,
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை,
திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை பேருந்து நிலையம்
ஆகியவற்றுக்கு அருகில் உள்ள மொத்தம் 18 அரசு மதுபானக்
கடைகளை அகற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)