Wednesday, June 8, 2016
முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!
முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற
தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 30.07.2014 அன்று சட்டமன்றத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை
அங்கீகரிக்கும் வகையில் முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற
புதிய விருது உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
15
வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3
பெண்களுக்கு ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று இவ்விருது
வழங்கப்படும் என்றும்,
இந்த முதல்–அமைச்சர் மாநில இளைஞர்
விருது ரூ.50,000
ரொக்கம், பாராட்டுப் பத்திரம்
மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி, 2015–2016 ஆம் ஆண்டிற்கான விருது
வருகிற ஆகஸ்டு 15–ந்தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்–அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு 15 வயது முதல் 35
வரையுள்ள ஆண்கள், பெண்கள்
விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1–ந்தேதி அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது மார்ச் 31–ந்தேதி அன்று 35
வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருக்க
வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, சமூக சமுதாயத்தில்
குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
சேவையின் தாக்கம் தெளிவாக கண்டறியப்படக் கூடியதாகவும், அளப்பரியதாகவும் இருத்தல் வேண்டும். பள்ளி, கல்லூரி, பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப்பணியில் உள்ளவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்
ஆவர். உள்ளூர் சமுதாய மக்களிடம் அவர்களுக்குள்ள மதிப்பினை இவ்விருதிற்காக
பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
முதல்–அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 வயது முதல் 35
வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட விளையாட்டு
அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வருகிற 20–ந்தேதி மாலை 4
மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்
நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)