முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 7, 2016

அரசு இ - சேவை மையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்!!

No comments :
மாவட்டத்தில் உள்ள அரசு இ - சேவை மையங்களின் மூலமாக மின்கட்டணம் செலுத்தவும் வசதி செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட மின் ஆளுமை சங்கம் மூலமாக அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 8 மையங்கள் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 2 மையங்கள் ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர 31 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 224 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலமாக சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.



இம்மையங்கள் மூலமாக வருவாய்த்துறை சான்றிதழ்கள், சமூக நலத்துறை திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.


தற்போது இம்மையங்களின் மூலமாக மின்கட்டணமும் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் இ-சேவை மையத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)