Tuesday, May 24, 2016
எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!!
சட்டசபை திமுக குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத்
தொடர்ந்து தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலில் திமுக 89 இடங்களில் வென்றுள்ள பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர்
ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் திமுக செயற்குழு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக சட்டசபை குழுவின் துணைத் தலைவராக துரைமுருகன்; கொறடாவாக சக்கரபாணி; துணை கொறடாவாக கு. பிச்சாண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக குழுவின் தலைவராக மு.க. ஸ்டாலின்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அவரே சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக
செயல்படுவார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!!
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்துவிட்டதால், பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் 4ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை அமலில் இருந்தது. இதனால் புதிய குடும்ப அட்டை மனுக்கள், நகல் குடும்ப அட்டை மனுக்கள், அச்சடித்து பெறப்பட்ட
புதிய குடும்ப அட்டை,
நகல் குடும்ப அட்டைகள், ரேஷன் கார்டில் பெயர்
நீக்கல்,
சேர்த்தல நடைபெறாது என பொதுவிநியோக திட்ட உணவுப்பொருள்
மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அறிவித்திருந்தார்.
தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டு 20ம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைகள், விண்ணப்பங்கள் மற்றும் பெயர்நீக்கம், பெயர் திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வட்ட வழங்கல் பிரிவில் புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்கும், குடும்ப அட்டை தொடர்பான பணிகளுக்கும் விண்ணப்பங்கள் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட பொதுமக்கள் கோரிக்கை!!
ஏர்வாடியில் இலவச கழிவறை கட்ட வேண்டும் என பொதுமக்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏர்வாடியில் சுல்தான் செய்யது இபுராகீம் பாதுசா நாயகம் அடக்கஸ்தலம் தர்ஹா உள்ளது. இதனால், இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து யாத்ரீகர்கள் சாதி, மத, இன வேறுபாடின்றி வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு ஏர்வாடி தர்கா எதிரே இலவச கழிவறை மற்றும் குளியலறை இருந்து வந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களைக்கூறி இந்த கழிவறை இடிக்கப்பட்டது. தற்போது ஏர்வாடியில் இலவச கழிவறை மற்றும் குளியலறை இல்லாததால் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்ட லாட்ஜ் உரிமையாளர்கள் அடிப்படை தேவைகளை மட்டும் நிறைவேற்ற கட்டணம் வசூலிக்காமல் தங்குவதற்கான கட்டணமாக வசூலிக்கின்றனர். வசதியின்மையாலும், கட்டணம் அதிகம் என்பதாலும் பஸ், வேன் ஆகியவற்றில் கூட்டமாக வரும் யாத்ரீகர்கள், சாலையோரங்களிலும் தர்கா அருகிலும் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த பல ஆண்டுகளாக ஏர்வாடி தர்கா எதிரே மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்த இலவச கழிவறை மற்றும் குளியலறையை மீண்டும் கட்ட வேண்டும் என யாத்ரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)