முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 6, 2016

முஸ்லீம் லீக் வரலாறு - பகுதி3!!

No comments :
முஸ்லீம் லீக் வரலாறு - பகுதி 1 படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.

முஸ்லீம் லீக் வரலாறு - பகுதி 2 படிக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.


1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரமடைந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றமும் காயிதே மில்லத் தலைமையும் 1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார்.

சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது. 

காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம். அஹமது இப்ராகீம் சாகிப் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்.ஏ, என்.எம். அன்வர் சாகிப், ஏ.கே. ஜமாலி சாகிப் எம்.எல்.ஏ ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.

1906-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக்இக்கூட்டத்துடன் நிறைவுபடுத்தப்பட்டது. 

வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


1948 மார்ச் 10 புதன்கிழமை காலை 10 மணி

சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக் கவுன்ஸிலர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
10 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காயிதெ மில்லத் தலைமை வகித்தார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற புதிய பெயரில் புதிய சட்ட திட்டங்கள், நடைமுறைகளுடன் புதிய அமைப்பாக செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.

காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் தலைவராகவும், மஹபூப் அலி பேக் சாகிப் எம்.எல்.ஏ, செயலாளராகவும், பம்பாய் ஹஸன் அலி பி. இபுராகீம் சாஹிப் எம்.எல்.ஏ. பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதல் நிகழ்ச்சியாக 1948-ல் திருச்சியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது திருச்சி நகர் மன்றம் காயிதெ மில்லத்திற்கு வரவேற்பளித்தது.

1949 மலபார் புதுநகரத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது 1951 -ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு நடைபெற்றது. 1952 பொதுத் தேர்தலில் மலபார் பகுதியிருந்து ஐந்து எம்.எல்.ஏக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றனர்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 24.05.1946 முதல் 27.10.1951 வரை மதராஸ் மாகான சட்டசபையிலும் 5.11.1948 முதல் 26.11.1949 வரை இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், 1952 முதல் 1958 வரை நாடாளுமன்ற ராஜ்ய சபையிலும் உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார்கள்.
1962, 1967, 1971 ஆகிய மூன்று முறை கேரள மாநில மஞ்சேரி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான சேவையாற்றினார்கள்.

மூன்று முறையும் தொகுதிக்குச் சென்று ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யாமலேயே வெற்றி பெற்று சாதனை படைத்தார்கள்.
1962 ல் திருச்சி காட்டூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தது.

காயிதெ மில்லத் தலைவராகவும், கே.டி.எம். அஹமது இபுராகீம் சாகிப் பொதுச் செயலாளராகவும், டி.ஏ.எஸ். அப்துல் காதர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

(தொடரும்.....)

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)