Sunday, April 3, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் 22கல்வி நிறுவனங்கள் அனுமதி பெறாதவை என்று அறிவிப்பு!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 22 நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பாக துணை மருத்துவப் படிப்புகளுக்கான
கல்லுரிகளை நடத்துகின்றன என மருத்துவப் பணிகளுக்கான இணை இயக்குநர் சகாய
ஸ்டீபன்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பு:
துணை மருத்துவப்பணி படிப்புகளை நடத்தும் கல்லூரிகள்
அனைத்தும் தமிழ்நாடு அரசு செவிலியர் பதிவு மையம், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றின் அனுமதி பெற்ற
கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்ட தலைமை
அரசு மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு செவிலியர்
பயிற்சிப்பள்ளியில் துணை மருத்துவப் பணிகளுக்கான படிப்புகள் நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் அனுமதி பெறாத துணை மருத்துவப்பணி
படிப்புகளுக்கான 22
கல்வி நிறுவனங்கள் சட்டத்துக்கு புறம்பானவையாக
அறிவிக்கப்படுகின்றன. அவற்றின் விவரம்:
ராமநாதபுரத்தில், ராயல் இன்டஸ்டிரியல்
இன்ஸ்டிடியூசன்,
கிங்ஸ் கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட்
இண்டஸ்டிரியல் ஸ்கூல்,
அன்னை தெரசா சாரிடபிள் டிரஸ்ட், ஸ்டார் இன்ஸ்டிடியூட்,
பிரின்ஸ் இன்டஸ்டிரியல் ஸ்கூல், நேஷனல் இன்ஸ்டிடியூட்,
மேரி மாதா இன்ஸ்டிடியூட், நாகசிவா இன்ஸ்டிடியூட்,
மெல்வின் இன்ஸ்டிடியூட், இந்திரா இன்ஸ்டிடியூட்,
பரமக்குடியில் ரேமா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ்
எஜூகேசன்,
எஸ்.கே.இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ், சொர்ணா பாராமெடிக்கல் டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், மேரிமாதா இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல்ஸ், மதர் இந்தியா இன்ஸ்டிடியூட், புளூ ஸ்டார்
இன்ஸ்டிடியூட் ஆப் கேட்டரிங், நர்சிங், பயர் சேப்டி,
மதர் தெரேசா இன்ஸ்டிடியூட், நேஷனல் இன்ஸ்டிடியூட்,
கமுதக்குடியில் மீரா இன்ஸ்டிடியூட், மீரா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் எஜூகேன்,
திருவாடானையில் நேஷனல் இன்ஸ்டிடியூட்
ஆகிய 22 நிறுவனங்கள் சட்டத்துக்கு
புறம்பானவை என அறிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் இக்கல்லூரிகளை அணுக வேண்டாம் எனவும்
தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதி பெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கான
கல்லூரிகளில் மட்டும் சேர்ந்து பயனடையுமாறும் அச்செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)