Sunday, March 27, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளில்
நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான புகார்களுக்கு சேவை மையம் அமைக்கப்பட்டு தொலைபேசி
எண்களையும் ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு:
நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகளைத்
தடுக்கும் பொருட்டு புகார் அளிக்க வசதியாக தொலைபேசி எண்கள் கொண்ட புகார் உதவி
மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி
எண் 1800
425 7038. சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக கட்டுப்பாட்டு அறையின்
கட்டணமில்லா தொலைபேசி எண் 1800
425 6669. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தேர்தல்
கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04567-232243.
இச்சேவை மையங்களில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்து நடவடிக்கை
எடுக்கப்படும்.
இதற்கென 24 மணி நேரமும் சுழற்சி
முறையில் உரிய அலுவலர்கள் பணியிலிருந்து செயல்பட்டு வருகிறார்கள்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க
விரும்பும் பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)