Tuesday, March 8, 2016
மார்ச் 10 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி ரயில் ராமேசுவரம் வருகிறது!!
ராமேசுவரத்துக்கு வரும் மார்ச் 10 ஆம் தேதி அறிவியல் கண்காட்சி ரயில் வருகிறது. இதை மார்ச் 13 ஆம் தேதி வரை 3
நாள்கள் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய பசுமைப்படையின் ராமநாதபுரம் கல்வி
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துறையுடன் இணைந்து அறிவியல் கண்காட்சி ரயிலை
இயக்கி வருகிறது.
இந்த ரயில் இம்மாதம் 10 ஆம் தேதி
புதுக்கோட்டையிலிருந்து ராமேசுவரம் வருகிறது. இம்மாதம் 12 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்கள் ராமேசுவரம் ரயில்
நிலையத்தில் இந்த ரயில் நிறுத்தப்படும். இந்த ரயிலில் பருவகால மாற்றத்தினால்
ஏற்படும் விளைவுகள்,
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள காடுகள், வன விலங்குகள்,
பாதுகாக்க வேண்டிய பறவை இனங்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகள் குறித்த காட்சிகள் படங்களாகவும், விளக்க காட்சிகளாகவும் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சி ரயிலை 3 நாள்களும் காலை 10 மணி முதல் மாலை 5
மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டக்
கல்வித்துறை அதிகாரிகள்,
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்
என்றார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)