Tuesday, February 16, 2016
தமிழக சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு!!
தமிழக சுகாதாரத்துறையில் பிளாக் ஹெல்த் ஸ்டாட்டிஸ்டீஷியன் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நிரப்பவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மொத்தம் 172 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு கணிதம், புள்ளியியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும்.
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும். பணியிடங்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்படும். விண்ணப்பங்களை www.tnpscexams.net/ www.tnpscexams.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொண்டு ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்ப கடைசி தேதி மார்ச் 14 ஆகும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 (பதிவுக் கட்டணம் ரூ.50, தேர்வுக் கட்டணம் ரூ.100) வசூலிக்கப்படும்.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தைக் காணலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)