Monday, February 15, 2016
கீழக்கரை நகராட்சியில் துப்புரவு சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!
கீழக்கரை நகராட்சியில் துப்புரவு சூப்பர்வைசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!இண்டெர்வியூவ் நாள்: 19-2-2016.
இடம்: கீழக்க்ரை நகராட்சி அலுவலகம்
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
முதுகுளத்தூரில் இருந்து மேலத்தூவல் கிராமத்துக்கு சிறப்புப் பேருந்து!!
முதுகுளத்தூரில் இருந்து மேலத்தூவல் கிராமத்துக்கு
சிறப்புப் பேருந்தை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
முதுகுளத்தூரில் இருந்து கீழத்தூவல், மேலத்தூவல் வழியாக ஆனைசேரி, அபிராமம் செல்வதற்கு
பேருந்து வசதியின்றி அப்பகுதி கிராமத்தினர் அவதிப்பட்டு வந்தனர். அதையடுத்து, பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு கிராம மக்கள் அமைச்சர் டாக்டர் எஸ்.
சுந்தரராஜிடம் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மேலத்தூவல் கிராமத்திலிருந்து அரசு சிறப்புப் பேருந்தை சனிக்கிழமை அமைச்சர்
தொடக்கி வைத்தார்.
விழாவுக்கு, அதிமுக ஒன்றியச் செயலர்
மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர். கருப்பசாமி தலைமை வகித்தார். முதுகுளத்தூர்
அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் இருளப்பன், அவைத் தலைவர்
சிவராமச்சந்திரன்,
பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் 16,18,23 தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்!!
கீழக்கரையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு, 3 நாள்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
கீழக்கரை அரசு மருத்துவமனை சார்பாக இம்மாதம்
16ஆம் தேதி கிழக்குத் தெரு அரபி பாடசாலையிலும்,
18இல் வெங்கடேஸ்வரா மகாலிலும்,
23இல் புதுத்தெரு நூரானியா பள்ளியிலும்
இச்சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இதில், பொது மருத்துவம், இருதயம்,
சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட
நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படும். மேலும், தேவைப்படுவோர் அறுவைச்
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுவர் என, அரசு மருத்துவமனை
மருத்துவர் ஜவாஹிர் உசேன் தெரிவித்தார்.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற பள்ளி மாணவர் கைது!!
ராமநாதபுரத்தில் வீடு புகுந்து திருட முயன்ற பள்ளி மாணவரை
போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார்
மனைவி தனலெட்சுமி(40).
இவர், சனிக்கிழமை தனது வீட்டை
பூட்டிவிட்டு குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் 15 வயது மகன்,
வீட்டின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளார்.
பின்னர்,
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபெட்டை திருடி வெளியே
வைத்துவிட்டு,
மறுபடியும் வீட்டுக்குள் சென்று பொருள்களை திருட
முயன்றுள்ளார்.
இந்நிலையில், குளித்துவிட்டு வெளியே
வந்த தனலெட்சுமி வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்து உள்ளே வந்து
பார்த்தபோது,
சிறுவன் தப்பி ஓடுவது தெரியவந்தது.
இது குறித்து, தனலெட்சுமி ராமநாதபுரம்
கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், காவல் சார்பு-ஆய்வாளர் இருளப்பன் வழக்குப் பதிந்து விசாரித்தார். பின்னர், மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த சிறுவனை கைது செய்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அச்சிறுவன் சேர்க்கப்பட்டான்.
இச்சிறுவன் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)