முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 25, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2ஏ தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன, 12, 712 பேர் தேர்வு எழுதினர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. ராமேசுவரத்தில் தேர்வு நடைபெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களை ஆட்சியர் எஸ்.நடராஜன் ஆய்வு செய்தார். பின்னர் ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு சென்று நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.


அதன்பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப் 2ஏ தேர்வு 48 மையங்களில் நடைபெறுகிறது.
15, 812 பேர் விண்ணப்பித்து 12, 712 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 3100 பேர் வரவில்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை விரிவுபடுத்தவும், ராமேசுவரம் மருத்துமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமேசுவரம் பகுதியை பசுமை ராமேசுவரமாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கை போல் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பசுமை திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும், கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)