முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 20, 2016

ராமநாதபுரத்தில் மாநில செஸ் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!

No comments :
ராமநாதபுரத்தில் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் ஜன., 31 ல் மாநில போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த தேர்வு சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும். 9, 11, 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தனித்தனியாக போட்டி நடத்தப்படும். ஐந்து சுற்றுகளில் வெல்வோருக்கு பரிசு வழங்கப்படும். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன., 29 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு 94431 34135 அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட செஸ் சங்க செயலர் ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

இந்தியாவின் முதல் ஆர்கானிக் மாநிலமாக சிக்கிம், அதிகாரபூர்வ அறிவிப்பு!!

No comments :
இந்தியாவின் முதல் உயிர்ம வேளாண்மை மாநிலமாக "பூக்களின் தேசம்" சிக்கிம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மண்ணுக்கும், உடலுக்கும் கேடுவிளைவிக்கும் வேதி உரங்களை பயன்படுத்தாமல் முற்றிலுமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி மட்டும் செய்யப்படுவது உயிர்ம வேளாண்மை ஆகும்.

6 லட்சம் மக்களையும் 75 ஆயிரம் ஹெக்டேர் வேளாண்மை நிலத்தைக் கொண்ட சிக்கிம் மாநிலம் முற்றிலும் உயிர்ம வேளாண்மைக்கு மாறும் முடிவை கடந்த 2003 ஆம் ஆண்டில் எடுத்தது.

ஆனால் அந்த முடிவிற்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. வேதி உரங்களுக்கு தடை விதித்தது உட்பட பல்வேறு நடவடிகைகளுக்கு பிறகு, கடந்த டிசம்பர் மாதம் முழுமையாக உயிர்ம வேளாண்மையில் ஈடுப்படும் மாநிலம் என்ற அதிகாரபூர்வ தரச் சான்றிதழை சிக்கிம் பெற்றது.

இந்தியாவில் ஆண்டுக்கு 1.24 மில்லியன் டன் உயிர்ம வேளாண்மை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்கிறது.

சிக்கிமை போலவே கேரளா, மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களும் உயிர்ம வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)