Sunday, January 17, 2016
தார தப்பட்டை - தமிழ் திரை விமர்சனம்!!
நடிகர்கள்: சசிகுமார், வரலட்சுமி, ஜிஎம் குமார்,
சுரேஷ் களஞ்சியம் ஒளிப்பதிவு: செழியன்
இசை : இளையராஜா
தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ், கம்பெனி புரொடக்ஷன்
எழுத்து - இயக்கம் : பாலா
மீண்டும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை தன் பாணியில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பாலா. இந்த முறை, கிராம மக்களின் முக்கிய பொழுதுபோக்கான கரகாட்டம், தப்படித்தலையும் அந்த கலைஞர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கிறார்.
தஞ்சையில் தீப்பாஞ்சி அம்மன் காலனியில் வசிக்கும் சன்னாசிக்கு (சசிகுமார்) தொழில் கரகாட்டம். அதை முடிந்த வரை கவுரமாகவே செய்து வருகிறான். அவரது குழுவில் இருக்கும் சூறாவளிக்கு (வரலட்சுமி) சன்னாசி மீது அப்படியொரு காதல். மாமா மாமா என சதா சன்னாசியைச் சுற்றி வரும் சூறாவளிக்கு, தன் மாமனை யாராவது தவறாகப் பேசிவிட்டால் வரும் கோபமிருக்கிறதே... அது நிஜ சூறாவளி. ஆனால் சன்னாசி, உள்ளூர சூறாவளி மீதிருக்கும் அன்பை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன் கரகாட்டக் குழுவினரைக் காப்பதையே கடமையாக நினைக்கிறான். ஒரு கட்டத்தில் கருப்பையா என்பவன் மூலம் அந்த காதலுக்கு பங்கம் நேர்கிறது. அவனை நம்பி, தன் மனதை கல்லாக்கிக் கொண்டு சூறாவளியை திருமணம் செய்து கொடுக்கிறான் சன்னாசி. ஆனால் அதன் பிறகு சூறாவளி என்ன ஆனால் என்றே தெரியாமல் போகிறது. சூறாவளி போனதால் சன்னாசியின் கரகாட்டக் குழுவும் தடுமாற ஆரம்பிக்கிறது. அவதாரம் பாணியில், குழுவிலிருக்கும் கலைஞர்கள் சிலரே வெளியேற ஆரம்பிக்கிறார்கள்.

சூறாவளி என்ன ஆனாள்? மீண்டும் கரகாட்டக் குழு வசந்த காலத்துக்குத் திரும்பியதா என்பதெல்லாம் திரையில் பார்க்க வேண்டியவை. மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பின்புலத்தை இன்றைய வணிக சினிமாவின் களமாக எடுத்துக் கொண்டு அதை வெகுஜன வெளிச்சத்துக்கு கொண்டுவரும் தன் நல்ல பிடிவாதத்தை இந்தப் படத்திலும் பாலா தளர்த்திக் கொள்ளவே இல்லை. அதுதான் பாலா. சலசலத்து ஓடும் ஆறு... கரையில் அரசமரம், சில குட்டிச் சுவர்கள்... தாண்டிப் போனால் அந்த காலனி.... ஒவ்வொரு முறையும் நல்லது கெட்டதுகளைத் தாண்டி நிகழ்ச்சி முடித்து, அந்தக் கரகாட்டக் குழு அந்த அரசமரத்தையொட்டி நடந்து போகும் காட்சி சொல்லும் வலி, வேதனை... வார்தைக்களுக்கு அப்பாற்பட்டவை.
கரகாட்டக் கலைஞர்களின் இரட்டை அர்த்தப் பேச்சு, பாட்டு போன்றவற்றைச் சொன்னதில் முடிந்த வரை கண்ணியம் காத்திருக்கிறார் பாலா. இசைஞானி இளையராஜா இந்தப் படத்தின் நிஜ நாயகன். சில காட்சிகளுக்கு முன்கூட்டியே இசையமைத்துக் கொடுத்து அதற்கேற்ப படமாக்க வைத்திருக்கிறார். இதெல்லாம் இந்த நூற்றாண்டின் அதிசயம். பாடல்கள் அத்தனையும் பொருத்தம். குறிப்பாக ஜிஎம் குமார் அந்த ஆஸ்திரேலியத் தூதருக்கு முன் பாடும் 'இடரினும்... ' செம கம்பீரம்... நெகிழ்வு. கரகாட்டப் பாடல்களில் இரண்டு ரீமிக்ஸ் போட்டிருக்கிறார் ராஜா. இரண்டுமே பாலாவின் ஆசை போலிருக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ராஜாவின் பின்னணி இசை புதிய அர்த்தத்தைத் தருகிறது. அந்தமானில் அவதிக்குள்ளாகும் கரகாட்டக் குழுவுக்கு, சுமை தூக்கும் வேலை கிடைக்கும்போது ஒரு பிஜிஎம் போட்டிருப்பார் பாருங்கள். க்ளைமாக்ஸ் ஸ்கோர்... அடேங்கப்பா!
சசிகுமார் மிகச் சரியாகவே செய்திருக்கிறார் என்றாலும், கடைசி வரை உம்மென்று, எப்போதும் வலியோடே திரிவது போன்ற பாவனையில் வருகிறார். அதை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. வரலட்சுமி பிரமிக்க வைக்கிறார். குடித்துவிட்டு அவர் உளறுவதும், அந்த அபார கரகாட்டமும் பிரமாதம். ஆனால் இடைவேளைக்குப் பிறகு ரொம்ப நேரத்துக்கு அவர் காணாமல் போகிறார். படத்தின் சுவாரஸ்யமும் அங்குதான் காணாமல் போகிறது. கோபக்கார, ஆனால் நிகரற்ற இசைக் கலைஞராக வரும் ஜிஎம் குமார், அந்த கரகாட்டக் கோஷ்டியில் உள்ள கலைஞர்கள், வில்லன் சுரேஷ் களஞ்சியம் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.
விமர்சனம்: ஒண் இண்டியா
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் ரூ.1.10 கோடியில் புதிய மீன் மார்க்கெட்!!
ராமநாதபுரத்தில் ரூ.1.10 கோடியில் புதிய
மீன் மார்க்கெட் அமைக்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழில்
பிரதானமாக உள்ளது. தமிழ கத்தில் 72 சதவீதம் மீனவர்கள் ராமநாத
புரம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
20
சதவீதம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. மாவட்டத்தின் பல
பகுதிகளில் பிடிபடும் மீன்கள் ராமநாதபுரம் மார்க் கெட்டிற்கு கொண்டு
வரப்படுகின்றன. தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.
ராமநாதபுரம் நகர், பட்டணம் காத்தான், சின்னக்கடை ஆகிய இடங் களில் மீன் மார்க்கெட்கள் உள்ளது. நெரிசல் மிகுந்த இடத்தில் நகர் மீன் மார்க்கெட் உள்ளதால் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படு
கிறது. இதனால் இந்த மீன் மார்க்கெட்டை இட மாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் முறையிட்டனர். புதிய மார்க்கெட்டிற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து தேசிய மீன் வளர்ச்சி வாரியத்திற்கு நகராட்சி நிர்வாகம் அனுப்பியது.
புதிய மார்க்கெட் ரூ.1.10 கோடியில் உழவர் சந்தை கீரைக்கார ஊரணி மேற்கு பகுதியில் அமைகிறது. நகராட்சித் தலைவர் சந்தானலட்சுமி சேகர் கூறுகையில், ""புதிய மார்க்கெட்டில் 28 கடைகள் அமைகின்றன. மீன்கழிவு தொட்டி, குடிநீர் குழாய் அமைக்கப்படும். மத்திய அரசு ரூ.75 லட்சம், மாநில அரசு ரூ.25 லட்சம் மானியம் தருகின்றன. நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவழிக்கப்படும், என்றார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)