Saturday, January 9, 2016
கீழக்கரையில் வாகனங்கள் நிறுத்த சாலையோரங்களில் கயிறு அமைக்கும் பணி நடக்கிறது!!
கீழக்கரையில் முக்கியமான அலுவலங்கள்,வங்கிகள்,பள்ளிகள் செயல்படுவதால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுகிறது போக்குவரத்தை காவல் துறை ஒழுங்குபடுத்தும்போது பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் சிறுசிறு சலசலப்பு ஏற்ப்படுகிறது.இது தேவையற்ற பதட்டத்தை உருவாக்குகிறது.
இதற்க்காக சாலை ஒரங்களில் கயிறு அமைத்து அதற்க்குள் வாகனங்களை நிறுத்தும்படி டி.எஸ்.பி.மகேஷ்வரி அறிவுறுத்தலின்படி இன்று முதல் கயிறு அமைக்கும் பணி கீழக்கரை நகராட்சி ஊழியர்கள் மற்றும் கீழக்கரை எஸ்.ஐ.சிவசுப்பிரமணியன் செய்து வருகிறார்கள்.
மேலும் கண்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீட்புவாகனம் மூலம் காவல் நிலையத்திறக்கு எடுத்து செல்லப்படும்.என்றும் பொதுமக்களுக்கு அறிவுறத்தப்படுகிறது.
செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)