முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 6, 2016

கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்குள்பட்ட ஏர்வாடி முக்குரோடு, வள்ளல் சீதக்காதி சாலை, கடற்கரை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கீழக்கரை நகரின் பிரதான சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், கடைகளின் படிக்கட்டுகள், விளம்பர போர்டுகள் ஆகியன இடையூறாக இருந்து வந்தன. இதனால், பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் நகரம் திணறி வருகிறது.



புகார்கள் எழுந்த நிலையில், கீழக்கரை உள்கோட்ட காவல் துணைக் கண்கானிப்பாளர் மகேஸ்வரி தலைமையில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில், வட்டாட்சியர் கமலாபாய், ஆணையர் மருது, காவல் ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஹஜ் கமிட்டியின் 2016ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை விண்னப்ப அறிவிப்பு!!

No comments :
2016ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திர அறிவிப்பு வெளியானது. ஜனவரி 14 முதல் விண்ணப்பம் பெறலாம், பிப்ரவரி 8ம் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்





(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் புறா பந்தயப் போட்டிகள் தொடக்கம்!!

No comments :
ராமநாதபுரம் ரேசிங் ஹோமர் கிளப் சார்பில், வரும் 9ஆம் தேதி முதல் புறா பந்தயப் போட்டிகள் தொடங்க இருப்பதாகவும், புறா வளர்ப்போர் முன்கூட்டியே தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அதன் நிர்வாக இயக்குநர் ரமேஷ் மாரியப்பன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது: சங்கத்தின் சார்பில் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கப்படும் இந்த புறா பந்தயத்தின் முதல் போட்டி, தாம்பரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கும், 2ஆவது போட்டி வரும் 17ஆம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து ராமநாதபுரத்துக்கும் நடைபெறும்.



அதேபோல், இம்மாதம் 31ஆம் தேதி ஓங்கோலிலிருந்து ராமநாதபுரத்துக்கும்,  பிப்ரவரி 12ஆம் தேதி விஜயவாடாவிலிருந்து ராமநாதபுரத்துக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

இறுதிப் போட்டியாக, பிப்ரவரி 25ஆம் தேதி வாராங்கல் பகுதியிலிருந்து ராமநாதபுரத்துக்கு 1050 கி.மீ. தொலைவு புறா பந்தயப் போட்டி நடத்தப்பட உள்ளது.  முதல் பரிசை பெறும் புறாவுக்கு ரூ. 15 ஆயிரமும், 2ஆவது பரிசு ரூ. 8 ஆயிரமும், 3ஆவது பரிசாக ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பந்தயத்திலும் குறிப்பிட்ட அளவு புறாக்கள் மட்டுமே பறக்கவிடப்படும் என்பதால், புறா வளர்ப்போர் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு 94434-44192 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)