Sunday, January 3, 2016
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்!!
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்!!
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், ஆசிரியர்களுக்கான தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு!!
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பல்வேறு பிரிவு அலுவலர்களுக்கு ரூ. 500 முதல் 3 ஆயிரம் வரை போனஸ்,
சிறப்பு போனஸ், பொங்கல் பரிசு ஆகியவற்றை
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி, முதன் முதலில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பொங்கலை முன்னிட்டு
கருணைத் தொகை வழங்கும் நடைமுறையை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்
அறிமுகப்படுத்தினார்.
தற்போதும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணியை கருத்தில் கொண்டு, பல்வேறு சலுகைகள் தமிழக
அரசால் அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் வரும் பொங்கலை ஒட்டி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ், சிறப்பு போனஸ் மற்றும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்
பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசு ஆகியவை வழங்கப்படும்.
கடந்த 2014-15 நிதியாண்டுக்கு சி, டி பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உச்சவரம்புக்குட்பட்டு 30 நாட்கள்
ஊதியத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும்
ஆசிரியர்கள்,
நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அதற்கு மேல் பணியாற்றி சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில்
நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேரம் மற்றும் பகுதிநேரம், தொகுப்பூதியம்.
சிறப்பு காலை முறை ஊதியம், சத்துணவு திட்டம்,
அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தினக்கூலி உள்ளிட்ட பணியாளர்களுக்கு ரூ. ஆயிரம் சிறப்புபோனஸ் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி
நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள்,
பல்கலைக்கழக மானியக்குழு, தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண்
ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பளம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதிமுறைகள் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றம் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் முன்னாள்
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக
வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.326 கோடியே 85 லட்சம் செலவு செய்யப்படும்'' என்று ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)