(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 29, 2016

விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :


நலிந்த விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற ஜன.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளி, கல்லுாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சங்கங்கள் நடத்திய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களாக இருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியில்லை.

2016 ஏப்.,1ல் 58 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது.



விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து, தற்போது வருமானம் இன்றி சிரமப்படும் தமிழகத்தில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு மானிய உதவித்தொகை வழங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ராமநாதபுரம் சீதக்காதி சேதிபதி விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் 10 ரூபாய் செலுத்தி பெறலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.,31க்குள் இதே அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படுபவை பரிசீலிக்கப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment