Saturday, December 10, 2016
கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா!!
கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார்
ஆலய திறப்பு விழா,
2017 ஆம் ஆண்டில் இரு நாட்டு பங்குத் தந்தையர்களும், மீனவர்களும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என இலங்கை
நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது:
கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் முற்றிலுமாக புதிதாக 2600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
புதிய ஆலயத்தை கட்டுவதற்கு பங்களிப்பு செய்தவர்கள் இலங்கைக்
கடற்படையினராவர். அவர்கள்,
மறைமாவட்டத்திடம் ஆலயத்தை ஒப்படைக்கும் நிகழ்வே இப்போது நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்விலும், இந்தியாவிலிருந்து அருட்சகோதரிகளும்,
மீனவர்களும் என 20 பேர் பங்கேற்பதாக
இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
புதிய ஆலயத்தின் திறப்பு விழா 2017 ஆம் ஆண்டு நடத்தப்படும். ஆண்டுதோறும் இருநாட்டு பக்தர்களும்
கலந்துகொள்ளும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் நாளிலேயே, இரு நாடுகளின் மறைமாவட்ட ஆயர்களும், பக்தர்களும்,
மீனவர்களும் பங்கேற்கும் வகையில் திறப்பு விழாவையும் சிறப்பாக
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment