Tuesday, December 27, 2016
ராமநாதபுரத்தில் டிச.,29ல் வேலைவாய்ப்பு சந்தை!!
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிச.,29ல் தனியார் வேலைவாய்ப்பு சந்தை நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியிருப்பதாவது:
தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு
வேலை வாய்ப்புத்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு சந்தை நடத்தப்படுகிறது.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இதன் மூலம் தனியார் நிறுவனங்களில்
பணியமர்த்தப்படுகின்றனர்.
அதன்படி, டிச.,29 பகல்
11:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு சந்தை
நடக்கிறது.
படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் சுய
விவரம் அடங்கிய விண்ணப்பம்,
ஐந்து மார்பளவு புகைப்படம், , அனைத்து
அசல் மற்றும் நகல் கல்விச்சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில்
ஆஜராக வேண்டும்.
இதில் வேலை பெற்றாலும் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு
ரத்து செய்யப்படாது.இவ்வாறு கூறியுள்ளார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment