(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 12, 2016

ராமநாதபுரத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி பள்ளி மாணவ,மாணவியருக்கான விநாடி-வினா போட்டி!!

No comments :
ராமநாதபுரம் முகம்மது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அஞ்சல்துறையின் சார்பில் இம்மாதம் 17 ஆம் தேதி பள்ளி மாணவ,மாணவியருக்கான விநாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ந.ஜெ.உதயசிங் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஞ்சல்துறையின் சார்பில் மாநில அளவிலான அஞ்சல் தலைகள் கண்காட்சி வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இம்மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் விநாடி-வினாப் போட்டி ராமநாதபுரத்தில் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.


இப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவியர்கள் பள்ளியின் சார்பில் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்போர் அடையாள அட்டையுடன் தலைமை ஆசிரியரின் கடிதமும் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து 3 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதியளிக்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்போர் மண்டல அளவிலான போட்டிக்கும் அதில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பங்கேற்போர் இம்மாதம் 14 ஆம் தேதிக்குள் ராமநாதபுரம் அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment