Sunday, November 20, 2016
ராமநாதபுத்தில் இலவச TALLY பயிற்சி வகுப்பு!!
ராமநாதபுத்தில் டேலி எனப்படும் கணினி இலவச பயிற்சி வகுப்பு
வரும் டிசம்பர் 8
ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு
பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் செயல்பட்டு வரும் இம்மையத்தின் சார்பில் கணினியில் டேலி எனப்படும் இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்குகிறது.
இப்பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு
படித்திருந்தாலே போதுமானது. பயிற்சிக்காலத்தில் உணவு,தேநீர் ஆகியன வழங்கப்படுவதுடன்
பயிற்சிக்கான சான்றிதழும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.ஒரு மாத குறுகிய கால
பயிற்சியாக தினசரி காலை 10
மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி
நடைபெறும்.
இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment