Saturday, November 12, 2016
வங்கி மற்றும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது!!
500
மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள்
செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் மக்கள்
கூட்டம் நிரம்பி வழிகிறது.
இந்த நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுக்கச் செல்லும் மக்கள், பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படாமலேயே இருப்பது கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்.
இந்த நிலையில், ஏடிஎம்களில் பணம் எடுக்கச் செல்லும் மக்கள், பெரும்பாலான ஏடிஎம்கள் இன்னும் திறக்கப்படாமலேயே இருப்பது கண்டு ஏமாற்றம் அடைகின்றனர்.
அதாவது வங்கிகள் செயல்படத் தொடங்கிய அடுத்த நாள் முதல், வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
வங்கி இருக்கும் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, பொதுமக்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் எடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
வங்கி இருக்கும் வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு, பொதுமக்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய் எடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அதுவும், ஒவ்வொரு வங்கியும், குறிப்பிட்ட தொகையை மட்டுமே வங்கி ஏடிஎம்களில் வைக்கின்றன. இதனால், 50 முதல் 100
வாடிக்கையாளர்கள் மட்டுமே வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும்
நிலை உள்ளது.
இயல்பு நிலை திரும்ப இன்னும் ஒரு வார காலம் ஆகலாம் என்று
நம்பப்படுகிறது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment