(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 22, 2016

பழைய 500,1000 ரூபாய்க்கு பதிலாக புதிய நோட்டுக்களை கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்கும் மாவட்ட அஞ்சல்துறை!!

No comments :

ராமநாதபுரத்தில் பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்படாத நிலையில் பணம் எடுக்க வங்கி முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசை நின்கின்றனர். 

ராமநாதபுரத்தில் கடந்த 13 நாட்களாக பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்பட வில்லை. திறந்திருக்கும் ஏடிஎம்களில் போதிய பணம் வைக்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்கள் வங்கியில் நீண்ட வரிசையில் நின்றே பணம் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வெயிலில் பலமணி நேரம் காத்திருந்து பணம் எடுத்தாலும் அது அத்தியாவசிய செலவுகளுக்கு போதாத நிலையாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.



இதுகுறித்து கூலி தொழிலாளி கூறுகையில், 500, 1000 ரூபாய்களை மாற்ற தினசரி வங்கிகள் முன்பு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் வங்கி வாசலில் நிற்க வேண்டியுள்ளதால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. பணத்தை வங்கியில் மாற்றினாலும் 2 ஆயிரம் நோட்டை கடைகளில் மாற்ற முடியவில்லை. ரூ.200க்கு பொருட்கள் வாங்கினால் கூட மீதி ஆயிரத்து 800ஐ தர கடை உரிமையாளர்கள் மறுக்கின்றனர்.

களத்தில் இறங்கிய அஞ்சல்துறை பாம்பன் கடலோர பகுதியில் அமைந்துள்ள சின்னப்பாலம், குந்துகால், அக்காள்மடம் கிராமங்களுக்கு நேற்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமையில் ஊழியர்கள் சென்றனர்.  அவர்கள் மீனவர்களிடம் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டை பெற்றுக்கொண்டு புதிய ரூ.2000 நோட்டை வழங்கினர். மூன்று கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment