(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 13, 2016

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,428 வழக்குகளுக்கு தீர்வு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 3,428 வழக்குகளில் முடிவு காணப்பட்டது. இவற்றில் ரூ.1.75 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது..

மாவட்டம் முழுவதும் 17 அமர்வுகளில் மக்கள் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. மொத்தம் 5331 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 3428 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக ரூ.1,75,49,019 வழங்க உத்தரவிடபட்டது.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம், தலைமைக் குற்றவியல் நீதிபதி கே.ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.தேவதாஸ், எஸ்.அண்ணாமலை,வழக்குரைஞர்கள் மனோகரன்,பிரணவநாதன்,சௌந்தரபாண்டியன், செந்தில்குமார் ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment