Tuesday, November 22, 2016
வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்!!
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு
உருவாக்கும் திட்டத்தின் கீழ் 35 சதவிகித மானியத்தில் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட
ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
அனைத்துப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பை
அதிகரிக்கவும், பொருளாதாரத்தில்
முன்னேற்றம் அடையவும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கல்வித்தகுதியோ அல்லது
வயது வரம்போ கிடையாது. வருமான உச்சவரம்பும் இல்லை.
உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள்
தொடங்க அரசு மானியத்துடன் வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச திட்டத் தொகையாக ரூ.25 லட்சம் எனவும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச திட்டத் தொகையாக ரூ.25 லட்சம் எனவும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.10லட்சம் மற்றும் சேவைத் தொழில்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் கடனுதவி பெற விரும்புபவர்களுக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.
பொதுப்பிரிவினராக இருந்து நகர்ப்பு புறத்தில்
தொழில் தொடங்கும் பட்சத்தில் கடன் தொகையில் 15 சதவிகித மானியமும் ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கும்
பகுதியில் 25 சதவகிதமும்
மானியமும் வழங்கப்படும்.
பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படை வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில்
தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 25 சதவிகித மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்குவோருக்கு 35 சதவிகித மானியமும் வழஙகப்படும்.
முந்திரி பதப்படுத்துதல், சிறு தானியங்களிலிருந்து உணவுப் பொருள்கள் தயாரித்தல், தென்னை நார் கயிறு, துகள் கட்டிகள் தயாரித்தல், கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, நோட்டுப் புத்தகங்கள், ஆயத்த ஆடைகள், அட்டைப் பெட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில் தொடங்க இத்திட்டத்தின்
கீழ் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு 04567-230497 என்ற எண்ணிலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள
மாவட்டத் தொழில் மைய வளாகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இது தவிர www.kviconline.gov.in
என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து
விண்ணப்ப நகலை மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறும் ஆட்சியரின்
செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment