(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 1, 2016

ராமநாதபுரம் நகர் பகுதியில் இரவு 11 மணி வரை டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் நகர் பகுதியில் இரவு 11 மணி வரை டவுன் பஸ்கள் இயக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் நகர் பகுதி என்பது தற்போது பட்டணம்காத்தான் செக்போஸ்ட் வரை விரிவடைந்துள்ளது.

நகராட்சி பகுதியை தவிர்த்து சுமார் 7 கி.மீ., வரையிலான சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதிகள் நகர் பகுதியில் அமைந்துள்ளன.

இப்பகுதிகளுக்கு சென்று வர சரியான பஸ் வசதிகள் செய்யப்படவில்லை. பகலில் அரண்மனை - கலெக்டர் அலுவலகத்திற்கு மினி பஸ், அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.


ஆனால், நகர் பகுதியில் வேலை செய்யும் பெரும்பாலான மக்கள் நகரை ஒட்டி அமைந்துள்ள பாரதிநகர், பட்டணம்காத்தான், சக்கரக்கோட்டை உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வசிக்கின்றனர்.
இவர்கள் பணி முடிந்து, இரவு 9:30 மணிக்குள் பஸ்ஸ்டாண்ட் சென்றால்தான் ஊருக்கு செல்ல முடியும். காரணம் பட்டணம்காத்தான் வழியே பெரியபட்டினம் செல்லும் கடைசி பஸ் இரவு 9:30 மணிக்கு செல்கிறது. அதன் பிறகு பஸ் இல்லை.

கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களை இரவு 9 மணிக்குள் மூடுவது சாத்தியமற்றது. மேலும்,
இந்த கடைசி பஸ் பல நேரங்களில் 10 நிமிடம் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, அரசு போக்குவரத்து கழகம் இரவு 11 மணி வரையிலாவது பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

இதுகுறித்து, ராமநாதபுரம் போக்குவரத்துக்கழக நகர் டவுன் பஸ் மேலாளர் தெய்வேந்திரனிடம் கேட்டபோது, ராமநாதபுரம் கிளை மேலாளருடன் பேசிவருவதாக தெரிவித்தார்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment