முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 29, 2016

SBI வங்கியில் 2016ஆம் ஆண்டுக்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!!

No comments :
பாரத ஸ்டேட் வங்கியில் 2016ஆம் ஆண்டுக்கான 103 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.




மொத்த பணியிடங்கள்: 103

பணியின் தன்மை: பல்வேறு துறையில் சிறப்பு அதிகாரிக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு: 22-5௦ (ஒவ்வொரு துறைக்கும் ஏற்றவாறு வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது)

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2016

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.12.2016

மேலும் கல்வித் தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்களுக்கு http://www.sbi.co.in/webfiles/uploads/files/CRPD-Rectruitment-Wealth-Management-English.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Monday, November 28, 2016

ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு!!

1 comment :
ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம், லாந்தை, கண்ணந்தை பகுதி கிராமங்கள் வழியாக மதுரை ராமேசுவரம் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது. இங்கு ஆளில்லா ரெயில்வே கிராசிங் இதுநாள் வரை செயல்பட்டு வந்தன. இந்த ரெயில் பாதையில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை எடுத்துவிட்டு சுரங்கபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் கணக்கெடுக்கப்பட்டு அவை உடனடியாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வாகனங்கள் சென்றுவர வசதியாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை ஆங்காங்கே தொடங்கி உள்ளன.



இதேபோல, ராமநாதபுரம் அருகே உள்ள கருங்குளம், லாந்தை பகுதிகளில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகளையும் மூடிவிட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதனை அறிந்த அந்தபகுதி மக்கள் தங்களின் கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கும், மருத்துவ தேவைகளுக்காகவும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுரங்கபாதை வழியாக வாகனங்கள் சென்றுவர முடியாததால் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆளுடன் கூடிய ரெயில்வே கிராசிங்காக மாற்ற வேண்டும் என்று அந்தபகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் திரண்டு வந்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் லாந்தை மற்றும் கருங்குளம் பகுதியில் ரெயில்வே சுரங்கபாதை அமைப்பதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட வந்தனர். இதனை அறிந்தகிராம மக்கள் அங்கு திரண்டு சென்று தங்கள் பகுதியில் சுரங்கபாதை அமைக்கக் கூடாது என்றும், ஆளுடன் கூடிய ரெயில்வே கிராசிங் மட்டுமே அமைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து சுரங்கப்பாதை அமைக்க வந்த தொழிலாளர்களை கண்டித்து பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் திரும்பி சென்றனர். இதன்காரணமாக அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Saturday, November 26, 2016

விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற நவ.,30க்குள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

கலெக்டர் நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016--17ல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லுாரி, பல்கலையில் படிக்கும் தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வீரர்கள், வீராங்கனைகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், கல்லுாரி, பல்கலை விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

கடந்த 2015 ஜூலை 1 முதல் 2016 ஜூன் 30 வரையிலான காலத்தில் விளையாட்டுத்துறையில் வெற்றி பெற்ற தகுதியும், திறனும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்திய போட்டிகள், அகில இந்திய பல்கலை இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை 10 ரூபாய் செலுத்தி ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் பெறலாம். 

இணையதளத்தில் பெறும் விண்ணப்பத்துடன், 10 ரூபாய்க்கு உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற பெயரில் அஞ்சல் ஆணையாகவோ, அல்லது டி.டி., இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் நவ.,30க்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரத்தில் குரூப்–1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தொகுதி– 1 நிலை அலுவலர் பணியிடங்களுக்கு உரிய போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் மூலம் இளைஞர் நலனை மேம்படுத்தும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதை லட்சியமாக கொண்டுள்ள எண்ணற்ற இளைஞர்களுக்கு உறுதுணையாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குரூப்–1 நிலை அலுவலர் பணியிடங்களுக்குஉரிய போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டுஉள்ளது.



இந்தபயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 248 இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை பெற்றுள்ளனர். இந்தபயிற்சி வகுப்பு வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர மீதமுள்ள 6 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும்.

இதில் கலந்து கொண்டுள்ள இளைஞர்களுக்கு பொது அறிவு, வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து போட்டித் தேர்வுக்கு தேவையான பல்வேறு பிரிவுகளின்கீழ் பயிற்சியும், பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இதுதவிர அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் இந்திய ஆட்சிப்பணி நிலை அலுவலர்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டு அவ்வப்போது பயிற்சி வகுப்பை நடத்துவதோடு, தங்களது போட்டித்தேர்வு அனுபவங்களை இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது.

எனவே நடைபெறவுள்ள குரூப்–1 தேர்வில் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் அனைவரும் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


அப்போது மாவட்ட வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் அபுபக்கர் சித்திக் உடன் இருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பிடிபட்டது, ஹவாலா பணமா??

No comments :
ராமநாதபுரத்தில் அரசுப்பேருந்தில் வெள்ளிக்கிழமை ரூ.13 லட்சம் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை போலீஸார் கைப்பற்றினர். அவை ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பாரதியார் நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் வெங்கடேசன் (40). மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநரான இவர் மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு அரசுப்பேருந்தை ஓட்டிச்சென்றார்.  

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் மதுவிலக்குப் போலீஸார் பேருந்தில் சோதனை நடத்தினர். போலீஸார் ஓட்டுநர் வெங்கடேசனிடம் இருந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தனர்.  


அதில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் 13 வீதம் ரூ.13 லட்சம் இருந்தது. அவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், மதுரை பேருந்து நிலையத்தில் ஒருவர் பொட்டலத்தைக் கொடுத்து ராமநாதபுரம் மதுரையார் தெருவில் வசிக்கும் வெற்றிவேல் மகன் நித்தியானந்தம் (42) என்பவரிடம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

இதன்பேரில் போலீஸார் நித்தியானந்தத்தைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மதுரையை சேர்ந்த புகாரி என்பவர் ராமநாதபுரத்தில் உள்ள ரசாக் தாகா என்பவரிடம் பார்சலை ஒப்படைக்குமாறு கூறியதாகவும்,பணம் என்னுடையது கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ரூ.13 லட்சத்தையும் போலீஸார் பறிமுதல் செய்து நித்தியானந்தத்திடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நித்தியானந்தம் குறிப்பிட்ட இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.  
 பேருந்தில் கைப்பற்றப்பட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வருமான வரித்துறை அதிகாரி சி.பாண்டி தலைமையிலான குழுவினரும் கேணிக்கரை காவல் நிலையத்தில் நித்தியானந்தத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மேலும் சிலர் சிக்குவார்கள் எனவும் காவல்தறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, November 23, 2016

இதுவரை ரூ.6 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளது!!

No comments :
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பிற்கு பின், இதுவரை ரூ.6 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் ஆகியுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி டெபாசிட் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி அதிக மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரமதர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க விரும்பவில்லை. பல்வேறு பிரச்னைகள் உள்ளன. மக்கள் தங்களின் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் மூலம் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது. தொடர்ந்து, ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் உரிய நடவடிக்கை என்ன? தற்போது அதன் நிலைமை என்ன? இதுவரை எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்து பேசிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, வங்கிகளில் இதுவரை ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரூ.15 லட்சம் கோடி வரை டெபாசிட் ஆகும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்திற்கு பிறகு ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாகவும், மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கருப்பு பணம் மற்றும் போலி ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதற்காகவே, அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும், தற்போதைய நிலைமையை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் முகுல் கூறினார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Tuesday, November 22, 2016

பழைய 500,1000 ரூபாய்க்கு பதிலாக புதிய நோட்டுக்களை கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்கும் மாவட்ட அஞ்சல்துறை!!

No comments :

ராமநாதபுரத்தில் பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்படாத நிலையில் பணம் எடுக்க வங்கி முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசை நின்கின்றனர். 

ராமநாதபுரத்தில் கடந்த 13 நாட்களாக பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்பட வில்லை. திறந்திருக்கும் ஏடிஎம்களில் போதிய பணம் வைக்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்கள் வங்கியில் நீண்ட வரிசையில் நின்றே பணம் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வெயிலில் பலமணி நேரம் காத்திருந்து பணம் எடுத்தாலும் அது அத்தியாவசிய செலவுகளுக்கு போதாத நிலையாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.



இதுகுறித்து கூலி தொழிலாளி கூறுகையில், 500, 1000 ரூபாய்களை மாற்ற தினசரி வங்கிகள் முன்பு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் வங்கி வாசலில் நிற்க வேண்டியுள்ளதால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. பணத்தை வங்கியில் மாற்றினாலும் 2 ஆயிரம் நோட்டை கடைகளில் மாற்ற முடியவில்லை. ரூ.200க்கு பொருட்கள் வாங்கினால் கூட மீதி ஆயிரத்து 800ஐ தர கடை உரிமையாளர்கள் மறுக்கின்றனர்.

களத்தில் இறங்கிய அஞ்சல்துறை பாம்பன் கடலோர பகுதியில் அமைந்துள்ள சின்னப்பாலம், குந்துகால், அக்காள்மடம் கிராமங்களுக்கு நேற்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமையில் ஊழியர்கள் சென்றனர்.  அவர்கள் மீனவர்களிடம் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டை பெற்றுக்கொண்டு புதிய ரூ.2000 நோட்டை வழங்கினர். மூன்று கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 35 சதவிகித மானியத்தில் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்துப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கல்வித்தகுதியோ அல்லது வயது வரம்போ கிடையாது. வருமான உச்சவரம்பும் இல்லை.

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச திட்டத் தொகையாக ரூ.25 லட்சம் எனவும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.10லட்சம் மற்றும் சேவைத் தொழில்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் கடனுதவி பெற விரும்புபவர்களுக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினராக இருந்து நகர்ப்பு புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் கடன் தொகையில் 15 சதவிகித மானியமும் ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கும் பகுதியில் 25 சதவகிதமும் மானியமும் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படை வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 25 சதவிகித மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்குவோருக்கு 35 சதவிகித மானியமும் வழஙகப்படும்.

முந்திரி பதப்படுத்துதல், சிறு தானியங்களிலிருந்து உணவுப் பொருள்கள் தயாரித்தல், தென்னை நார் கயிறு, துகள் கட்டிகள் தயாரித்தல், கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, நோட்டுப் புத்தகங்கள், ஆயத்த ஆடைகள், அட்டைப் பெட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு 04567-230497 என்ற எண்ணிலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய வளாகத்தை தொடர்பு கொள்ளலாம்.


இது தவிர ​‌w‌w‌w.k‌v‌i​c‌o‌n‌l‌i‌n‌e.‌g‌o‌v.‌i‌nஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விண்ணப்ப நகலை மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறும் ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Sunday, November 20, 2016

ராமநாதபுரத்தில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மெகா வேலைவாய்ப்புச் சந்தை!!

No comments :

ராமநாதபுரத்தில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மெகா வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் என்.சுப்பையன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள இச்சந்தை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் தமிழகம் முழுவதும் இருந்து     70-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

இதற்கென தாற்காலிகப்பேருந்து நிறுத்தம், இளைஞர்கள் வந்து செல்வதற்காக பேருந்து வசதி, குடிநீர் வசதி ஆகியன செய்வது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.


இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ஆய்வின் போது ராமநதாபுரம் எஸ்.பி. மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நடராஜன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் பெ.மாரியம்மாள், பொதுப்பணிததுறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல் மாறன்  உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுத்தில் இலவச TALLY பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுத்தில் டேலி எனப்படும் கணினி இலவச பயிற்சி வகுப்பு வரும் டிசம்பர் 8 ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் செயல்பட்டு வரும் இம்மையத்தின் சார்பில் கணினியில் டேலி எனப்படும் இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்குகிறது.


இப்பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.      பயிற்சிக்காலத்தில் உணவு,தேநீர் ஆகியன வழங்கப்படுவதுடன் பயிற்சிக்கான சான்றிதழும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.ஒரு மாத குறுகிய கால பயிற்சியாக தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.


இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)  மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும். இதில் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.



மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எம்.ஜோசப் செல்வராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

Wednesday, November 16, 2016

சிறுபான்மையின மாணவ–மாணவிகள் கல்வி உதவி தொகை, விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர்-30!!

No comments :
சிறுபான்மையின மாணவமாணவிகள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை அளிக்க வருகிற 30–ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களிலும் பள்ளிப்படிப்பு படித்து வரும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சியம் மற்றும் ஜெயின் வகுப்பை சார்ந்த மாணவமாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை படிக்கும் மாணவமாணவியரின் பெற்றோர். பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பிளஸ்–1, பிளஸ்–2 படித்து வரும் மாணவமாணவியரின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.



மாணவமாணவியர் முந்தைய கல்வி ஆண்டின் இறுதித் தேர்வில் (1–ம் வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் கல்வி உதவி தொகை பெற்றிருக்கக்கூடாது. ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதில் அனைவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவியர் படித்து வரும் கல்வி நிலையத்தில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற 30–ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் மாணவமாணவியரிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து ஆன்லைன் மூலம் வருகிற 30–ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் தகுதி உள்ள மாணவமாணவியரின் விண்ணப்பங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலருக்கு அளிக்க வேண்டும்.

உரிய காலத்தில் சிறுபான்மையின மாணவமாணவிகள் விண்ணப்பித்து கல்வி உதவிதொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

குழந்தைகளுக்கு மருத்துவ உதவி தேவையா, அழையுங்கள் சைல்டுலைன் 1098!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளில் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் சைல்டுலைன் அமைப்பினரை  1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி.துரைமுருகன், சைல்டுலைன் இயக்குநர் எஸ்.கருப்புச்சாமி ஆகியோர் கூறியது:

ஆதரவற்ற குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், வன்முறையாலும், பல்வேறு கொடுமைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளும் சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.  



முக்கியமாக மருத்துவ உதவி தேவைப்படுவோர் சைல்டுலைன் அமைப்பினரை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம். சைல்டுலைன் அமைப்பின் உதவியால் மொத்தம் 6 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்துள்ளனர். வாய்பேச முடியாத செவித்திறன் குறைபாடுடைய இரு குழந்தைகளுக்கு அரசின் நிதியுதவியை பெற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.  கடந்த ஓராண்டில் மட்டும் 94 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் தொழிலாளர்கள் 7 பேரும், பள்ளியிலிருந்து இடைநின்ற குழந்தைகளாக 75 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.  பிச்சையெடுத்த குழந்தைகள் 28 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு ஓடிப்போனதாக 10 பேரும், காணாமல் போனதாக 18 குழந்தைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். சைல்டுலைன் அமைப்பின் மூலம் மருத்துவ உதவி 36 பேருக்கும், கல்வி உதவி 139 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

பேட்டியின் போது சைல்டுலைன் மையத்தின் துணை இயக்குநர் எஸ்.தேவராஜ் உடனிருந்தார்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)