Saturday, October 8, 2016
ராமநாதபுரத்தில் இலவச ”மொபைல் செர்வீஸ்” பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரத்தில் வங்கிக்கிளை சார்பில் இம்மாதம் 13 ஆம் தேதி முதல் இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் இப்பயிற்சியை அளிக்கிறது. இதுகுறித்து பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.சியாமளாகுமார் புதன்கிழமை கூறியது:
இப்பயிற்சி வகுப்பில் அனைத்து ஆண்டிராய்டு செல்லிடப்பேசிகளையும் பழுது நீக்குவது குறித்து கற்றுத்தரப்படும்.
பயிற்சி வகுப்பு தினசரி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5
மணி வரை தொடர்ந்து 21 நாள்கள்
நடத்தப்படும்.
பயிற்சியின் போது தேநீர், மதிய உணவு,
பயிற்சிக்கான கையேடுகள், பழுதுநீக்கும் மென்பொருள்
குறுந்தகடுகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் சேர 10 ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே போதுமானது. ஆண்,பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். முதலில் வரும் 30 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு பயிற்சியில் சேர்த்துக்
கொள்ளப்படுவர்.
நவம்பர் முதல் தேதியிலிருந்து இன்வெர்ட்டர், யூ.பி.எஸ். தயாரிப்பது, பழுது நீக்கும் பயிற்சி தொடங்கும். இப்பயிற்சிக்கு 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியும் இலவசமாக 21 நாட்கள் கற்றுத்தரப்படும்.
மேலும் விபரங்களுக்கு 9443896577 அல்லது 04567 221612 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment