Thursday, October 20, 2016
சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் நேருயுவகேந்திரா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த இளைஞர்
மற்றும் மகளிர் மன்றங்களுக்கு நேருயுவகேந்திரா சார்பில் விருது வழங்கப்பட உள்ளது.
இது குறித்து நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜவஹர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில்
ஆண்டு தோறும் மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு விருது
வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிற்கு சிறப்பாக செயல்பட்ட இளைஞர் மற்றும்
மகளிர் மன்றத்திற்கு விருது வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறோம்.
விண்ணப்பிக்கும் மன்றங்கள் நேரு யுவகேந்திராவிலும்
மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்து இருக்க வேண்டும். கடந்த 1.4.2015
முதல் 31.3.2016 வரை சிறப்பாக பணியாற்றி இருப்பதற்கான ஆதாரங்களை
இணைக்க வேண்டும்.
பரிசுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும்
மன்றம், மாநில அளவிலான
இளையோர் மன்ற விருது தேர்வுக்கு அனுப்பப்படும்.
விருது பெறத் தகுதியுள்ள மன்றங்கள்
விண்ணப்ப படிவங்களை மாவட்ட நேருயுவ கேந்திரா அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை வரும்
நவம்பர் மாதம் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள்
மாவட்ட நேருயுவகேந்திரா,
பாரதிநகர்,
ராமநாதபுரம்-623503
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் என
அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment