Wednesday, October 19, 2016
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு விற்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்!!
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் தின்பண்டங்கள்
விற்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது
கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை
தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்காக இனிப்புகள், கார வகைகள்,
கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருள் பல இடங்களில்
தயாரிக்கப்படுகிறது. இவற்றைத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பவர்கல் உணவுப்
பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றே விற்பனை செய்ய வேண்டும்.
தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டும். பேக்கிங் செய்யும்போது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், காலாவதியாகும் தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
பண்டிகைக் காலத்தில் மட்டுமே பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பான புகார்கள் இருப்பின் ராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலர் தொலைபேசி எண் -04567-231170 அவர்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment