(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, October 14, 2016

ஏர்வாடியில்தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பெண்ணின் சடலம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் வியாழக்கிழமை தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த பெண்ணின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.  

ஏர்வாடியில் முகம்மது அபுபக்கர் பாதுஷா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

35 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஏர்வாடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி; தினமணி


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment