Thursday, October 13, 2016
மத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி - கலெக்டர்!!
மத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரம்
மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
இது குறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
(எஸ்.எஸ்.சி) நடத்த உள்ள இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பொறியாளர்களுக்கான
இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து
வருகிறது.
எனவே பி.இ. சிவில்,
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மேற்படி இளநிலை
பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
மேலும்
விபரங்களுக்கு செல்லிடப்பேசி 9952270579
என்ற
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment