Tuesday, October 4, 2016
தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து!!
திமுக தொடர்ந்த வழக்கில், தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு
பிறப்பித்துள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடம்
ஒதுக்கப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அரசாணையில் உள் நோக்கம் உள்ளது.
எனவே உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி திமுக சார்பில் சென்னை
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக
திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான 3 அரசாணைகளை ரத்து செய்வதாக
உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் உள்நோக்கம் கொண்டவை.
எனவே, இது தொடர்பான 3
அரசாணைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று
குறிப்பிட்டுள்ளது.
மேலும், டிசம்பர் 30ம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று மாநில
தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment