Thursday, October 20, 2016
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20247 பேர் பயன்!!
முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 20247 பேர்
மருத்துவச் சிகிச்சை மற்றும் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்திருப்பதாக ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு மற்றும்
தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாத மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவைச்
சிகிச்சை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் உள்ள 10 அரசு மருத்துவமனைகள்
மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்
மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.28,22,87,649
செலவில் 20,247 பேர் மருத்துவ வசதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10.82 கோடி செலவில் 6924 பேருக்கும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7.04
கோடி செலவில் 4030
பேருக்கும் கீழக்கரை அரசு மருத்துவமனையில்
ரூ.2.32 கோடி செலவில் 2013
பேருக்கும் மருத்துவ சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள்
இத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத்
திட்ட அடையாள அட்டை பெற்றிட ஏதுவாக ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கென தனிப்பிரிவு
தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த அரிய வசதியை நல்ல முறையில்
பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment