(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 21, 2016

ராமநாதபுரத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் தொடங்கி வைத்தார்!!

No comments :
ராமநாதபுரத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெறும் இளைஞர்களுக்கான அனைத்து அரசு பொறியாளர் பணியிடங்களுக்குரிய போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பினை கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அரசு பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டு, விருப்பமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் 200 தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். குறிப்பாக சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பட்டதாரி இளைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த பயிற்சி வகுப்பில் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கான தேர்வாணைய போட்டித்தேர்வுகள் யூ.பி.எஸ்.சி. உள்பட அனைத்து அரசுத்துறை பொறியாளர் பணியிடங்களுக்குரிய போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பொறியியல் படித்த இளைஞர்கள் பொறியியல் துறை மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கி வரும் சூழ்நிலை இருந்து வருகிறது. பொறியியல் படிப்பினை அடிப்படையாக கொண்டுள்ள இளைஞர்கள் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுகளையும் எளிதாக வெற்றி கொள்ள முடியும். இப்பயிற்சி வகுப்பானது வாரந்தோறும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தவிர மீதமுள்ள 5 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும்.


முன்னதாக பல்வேறு அரசுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது அரசுத் துறையில் பணியாற்றி வரும் அலுவலர்களை கொண்டும், தனியார் பயிற்றுனர்களைக் கொண்டும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு அரசு போட்டித்தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment