Thursday, September 8, 2016
முழுபயன்பாடை அடையுமா பரமக்குடி புறவழிச்சாலை..?!!
பரமக்குடியில் ஐடிஐ-க்கு எதிரே ஆரம்பிக்கும் புறவழிச்சாலையில்
எந்தவித வழிகாட்டுப்பலகையும் இல்லாதபடியால் இராமநாதபுரத்திலிருந்து வாகனத்தில்
வருவோர் புறவழிச்சாலையை பயன்படுத்தும் விதத்தில் வழிகாட்டிப்பலகை ஒன்றை நிறுவிட
வேண்டுமென கோரிக்கை வைக்கப்படுகிறது.
மேலும்; புறவழிச்சாலை முழுதும் மின்
விளக்கில்லாமல் இரவில் பாதுகாப்பில்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய
மின்விளக்குகள் அமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு புறவழிச்சாலையின்
முழுப்பயனை அடைய வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.
- *அ.சேக் அப்துல்லா*,
இராமநாதபுரம்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment