(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, September 18, 2016

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினர் விருப்ப மனு அளிக்கலாம்!!

No comments :
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு..வினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று ராமநாதபுரம் மாவட்ட தி.மு.. செயலாளர் சுப..திவாகரன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.. செயலாளர் சுப..திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிட விரும்பு தி.மு..வினர் 19–ந்தேதி(நாளை) முதல் 29–ந்தேதி வரை பரமக்குடி தரைப்பாலம் அருகே உள்ள கவுரி பவனம் திருமண மண்டபத்தில் விருப்ப மனு அளிக்கலாம்.


காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மனுக்கள் பெறப்படும். மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு ரூ.10,000–மும், ஒன்றிய கவுன்சிலருக்கு ரூ.2,000–மும், நகர்மன்ற உறுப்பினருக்கு ரூ.4,000–மும், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1000–மும் கட்டண தொகை செலுத்த வேண்டும்.

இதில் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிபெற தி.மு..வினர் பாடுபடவேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment